4 மாசமா அப்படி ஒரு வேஷம் போட்டு கடைக்கு வந்த 50 வயது பெண்! இறுதியில் கடை முதலாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி....!!
நாகப்பட்டினம் மற்றும் சென்னை நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களைப் போல் நடித்து நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடி பகுதிகளில், வாடிக்கையாளர்களைப் போல் நடித்து நகைக் கடைகளில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு சம்பவங்கள் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரு இடங்களிலும் பதிவான CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் நகைக் கடையில் வெள்ளி கொலுசு திருட்டு
வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள், நகைகளைப் பார்ப்பது போல் ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுடன் வந்த இளம் பெண் ஒருவர், கவுன்ட்டரில் இருந்த வெள்ளி கொலுசை கைப்பையில் மறைத்து எடுத்துச் சென்றதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கவரிங் கடையில் நகையை திருடி அசிங்கப்பட்ட திமுக புள்ளி! சிசிடிவி மூலம் அடையாளம்! பகீர் சம்பவம்!
வியாசர்பாடியில் 85 சவரன் நகைகள் மாயம்
சென்னை வியாசர்பாடியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளர் கணக்குகளை ஆய்வு செய்தபோது சுமார் 85 சவரன் நகைகள் குறைந்திருப்பது தெரியவந்தது. கடந்த 4 மாதங்களாக முகத்தை மறைத்து ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகைகளை எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் காரில் தப்பிச் செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.
ஒருவர் கைது; கூட்டாளிகளை தேடும் போலீசார்
விசாரணையின் போது வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, மீஞ்சூரைச் சேர்ந்த ரிகானா (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த நகைத் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற நூதன திருட்டுகள் காரணமாக வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.