கணவனின் கேடிதனத்தில் வெளிநாட்டு மனைவிக்கு உண்டான சந்தேகம் ! வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! போலீஸ்காரர் கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த அந்த காரியம்... வசமாக வலையில் சிக்கிய கணவன்!!!
சென்னை வளசரவாக்கத்தில் வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி, சிசிடிவி மூலம் கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்து கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் வெளிநாட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, மற்றொரு பெண்ணுடன் இருந்ததை நேரில் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா
கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அருள் பிரசாத் (34) என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மனைவி வெளிநாட்டில்.., பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய சம்பவம்.. கடலூரில் திடுக்.!
கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அறியாமல் வீட்டில் CCTV கேமராக்களை அபிநயா பொருத்தியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கேமராக்களின் இணைப்பை தனது செல்போனுடன் இணைத்து, வெளிநாட்டிலிருந்தே வீட்டின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
ரகசியமாக சென்னை வந்த மனைவி
சில நாட்களுக்கு முன்பு யாரிடமும் தெரிவிக்காமல் சென்னை திரும்பிய அபிநயா, ஓர் ஹோட்டலில் தங்கி கேமரா காட்சிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அருள் பிரசாத் மற்றொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததை கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற அபிநயா, இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அருள் பிரசாத் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவருடன் இருந்த பெண்ணுக்கும் அபிநயாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
காயமடைந்த பெண்; போலீஸ் விசாரணை
வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதில் அபிநயா காயமடைந்துள்ளார். அதன்பின் அவர் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்கு பிறகு, வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அபிநயா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.