தமிழக கஜானாவில் வருவாயை பெருக்க CM விஜய்யின் மாஸ்டர் பிளான்! ஒர்க் அவுட் ஆகுமா? பட்ஜெட்கு முன் தவெக அரசு எடுத்த மாற்று நடவடிக்கை.!!!
தமிழக அரசின் வருவாயை அதிகரித்து கடன் சுமையை குறைக்கும் நோக்கில் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் பட்ஜெட்டுக்கு முன் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் வருவாயை அதிகரித்து, மாநிலத்தின் கடன் சுமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொருளாதார வல்லுநர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் சூழலில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான இந்தக் குழுவில் முனைவர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜீப்ஷா (ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்.), எம்.ஏ. சித்திக் (ஐ.ஏ.எஸ்.) மற்றும் முனைவர் சுரேஷ்பாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் வருவாய் பெருக்கம் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கான பரிந்துரைகளை வழங்குவது இக்குழுவின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: அரசாணையின்படி கடன் முழுவதும் தள்ளுபடி....! தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய்யின் மகிழ்ச்சி செய்தி..!!!
வருவாய் உயர்த்த புதிய வழிகள் ஆய்வு
அரசு செலவினங்களில் தேவையற்ற செலவுகளை குறைப்பது, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிவது, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட அம்சங்களை இக்குழு விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக அரசின் அனைத்து துறைகளிலிருந்தும் தேவையான தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை பெறும் முழு அதிகாரமும் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு முன் முக்கிய நடவடிக்கை
பொருளாதார நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழு வழங்கும் ஆய்வறிக்கை மற்றும் ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் நலத் திட்டங்களை நிதி நெருக்கடி இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தவும், வரவிருக்கும் பட்ஜெட்டின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்தக் குழுவின் பரிந்துரைகள் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கஜானாவின் மொத்த லிஸ்ட்டை புட்டு புட்டு வைக்க போகும் CM விஜய்! துறை வாரியாக 3 மணி நேர ஆலோசனை.. ஆகஸ்ட் 5-இல் அதிரப்போகும் தமிழகம்..!!!