BREAKING: சற்று முன்... நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு...! தமிழக அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஷ்!!!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் உச்சவரம்பை அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்ட நிலையில், இனி ரூ.10,000 வரை கடன் பெற முடியும். புதிய நடைமுறை ஏற்கனவே அடமானத்தில் உள்ள நகைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 கடன்
கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை, தற்போதைய தங்க சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதத்தை கணக்கிட்டு ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று மாதத்தில் ரூ.187 கோடி மிச்சம் செய்த தவெக ஆட்சி! திமுக வுக்கு எதிராக போட்ட ஸ்கெட்ச்.. அப்போ ஆண்டுக்கு 750 கோடியா?
பழைய நகைக்கடன்களுக்கும் புதிய வரம்பு
ஏற்கனவே கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள், அந்த நகைக்கடனை புதுப்பிக்கும் போதும் உயர்த்தப்பட்ட உச்சவரம்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நிலுவையில் உள்ள கடன்களை புதுப்பிக்கும்போது கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எளிய மக்களுக்கு கூடுதல் நிதி உதவி
தங்கத்தை அடமானம் வைத்து அவசர தேவைகளுக்கான பணத்தை பெறும் குடும்பங்களுக்கு இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு, தற்போதைய தங்க விலைக்கு ஏற்ப அதிக கடன் தொகையை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய உச்சவரம்பு நடைமுறைக்கு வருவதன் மூலம் நகைக்கடன் பெறுவோருக்கு கூடுதல் நிதி வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.