×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூன்று மாதத்தில் ரூ.187 கோடி மிச்சம் செய்த தவெக ஆட்சி! திமுக வுக்கு எதிராக போட்ட ஸ்கெட்ச்.. அப்போ ஆண்டுக்கு 750 கோடியா?

தமிழக ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு கொள்முதலில் விலை குறைந்ததால் 3 மாதங்களில் ரூ.187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

தமிழக ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு கொள்முதல் விலையில் அரசு பெரும் தொகையை சேமித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சியில் கிலோ ரூ.109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு, தற்போது ரூ.77.89-க்கே வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் ரூ.187.56 கோடி வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

கிலோவுக்கு ரூ.31 குறைந்த கொள்முதல் விலை

சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஒதுக்கப்படும் 20,000 மெட்ரிக் டன் பருப்பை கொள்முதல் செய்ய, முந்தைய ஆட்சியில் 3 மாதங்களுக்கு ரூ.654.9 கோடி செலவான நிலையில், தற்போதைய ஆட்சியில் அதே அளவு மற்றும் தரத்திலான பருப்புக்கு ரூ.467.34 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது கிலோவுக்கு சுமார் ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் முடிந்ததும், முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி...! அதிகாரிகளுக்கு பறந்த அவசர உத்தரவு...!!!

அதிக விநியோகஸ்தர்கள் பங்கேற்றதே காரணமா?

சந்தையில் உணவுப் பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், பருப்பு கொள்முதல் விலை மட்டும் 29 சதவீதம் குறைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தரக் கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், இந்த முறை டெண்டரில் அதிக எண்ணிக்கையிலான விநியோகஸ்தர்கள் பங்கேற்றதால் போட்டி அதிகரித்து விலை குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், சமையல் எண்ணெய் கொள்முதல் விலை முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும்போது லிட்டருக்கு ரூ.143.91-ல் இருந்து ரூ.154.99 ஆக உயர்ந்துள்ளதாக உணவுத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு பொருளின் கொள்முதல் விலையும் சந்தை நிலவரம் மற்றும் டெண்டர் போட்டியைப் பொறுத்து மாறுபடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.750 கோடி சேமிக்க வாய்ப்பு

தற்போதைய குறைந்த விலை அடுத்தடுத்த ஒப்பந்தங்களிலும் கிடைத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை கூடுதல் சேமிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புப் பொது விநியோகத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவிடப்படும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடன் சுமையும் ரூ.27,181 கோடியாக உள்ளது. எனவே, கொள்முதல் செலவில் ஏற்பட்டுள்ள இந்தக் குறைப்பு அரசின் நிதிச் சுமையை குறைக்க உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், சந்தை விலைகள் உயர்ந்த சூழலில் கொள்முதல் விலை மட்டும் கணிசமாக குறைந்திருப்பது தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளன. முந்தைய காலகட்டத்தில் அதிக விலை கொடுத்து பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதா என்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: மாயமான 4 வயது சிறுவனுக்கு உறவினர் செய்த கொடூரம்! கடத்தி சென்று கழிப்பறையில் கழுத்தை அறுத்து... கல்குவாரியில் காத்திருந்த அதிர்ச்சி! மதுரையில் நடந்த கொடூரம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#துவரம் பருப்பு #ரேஷன் கடைகள் #Tamar Nadu Procurement #தவெக அரசு #நிதி சேமிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story