BREAKING : தமிழ்நாட்டையே தலைகீழாக மாத்திய திமுக ஆட்சி! புட்டு புட்டு வைத்து வெள்ளை அறிக்கை பட்டியல் வெளியிட்ட தவெக ஆட்சி! முழு விவர தகவல்கள் உள்ளே..!!!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலக் கடன், வருவாய் பற்றாக்குறை மற்றும் வட்டிச் செலவுகள் குறித்து பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் செலவின நிலை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் கோடியாக இருந்த மாநில அரசின் கடன், 2026ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்பில்.... சொன்ன சொல்லை இன்னும் 2 வாரத்தில் காப்பாற்ற போகும் முதல்வர் விஜய்! அம்பலமாக போகும் கஜானா ரகசியம்..!!!
வருவாய் பற்றாக்குறையில் அதிகரிப்பு
2021ஆம் ஆண்டில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2026ஆம் ஆண்டில் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தை விட தற்போதைய வருவாய் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், வளர்ச்சி முதலீடுகளுக்குப் பதிலாக அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காகவே அரசு கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்டி மற்றும் கட்டாயச் செலவுகள் உயர்வு
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவில் 22.8 சதவீதம் வட்டிச் செலவுக்கே செல்கிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி வரை வட்டி செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகள் மொத்த வருவாயில் 64.4 சதவீதமாக உயர்ந்துள்ளன.
2025-26 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத்தின் மூலதனச் செலவின விகிதம் 1.44 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
வரி வருவாய் சரிவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்
தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 5.45 சதவீதம் குறைந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் நாட்டில் அதிக வருவாய் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, தற்போது தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.1,07,365 கோடியாகவும், மாநில போக்குவரத்து கழகங்களின் கடன் ரூ.48,865 கோடியாகவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனிநபர் கடன் சுமை ரூ.1.28 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தகவலின்படி, முதியோர் விகிதம் வேகமாக அதிகரித்து வரும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதால், உழைக்கும் வயதுடைய மக்களின் விகிதம் குறையும் சவாலும் உருவாகியுள்ளது. புதிய வருவாய் ஆதாரங்கள் உருவாக்கப்படாமல் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், எதிர்காலத்தில் புதிய திட்டங்களை அமல்படுத்த கூடுதல் கடன் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளதாக வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.