சொத்துதான் முக்கியம்.. தந்தை லாரி ஏற்றிக்கொலை.. இப்படியும் ஒரு மகனா? காஞ்சிபுரத்தில் பகீர்.!
Kanchipuram News: தந்தையிடம் வீடு கட்டுவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன், இறுதியில் அவரை கொலை செய்துள்ளார்.
லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது செய்யப்பட்டார்.
காதல்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மண்ணூர், ராம்ஜி தெருவில் வசித்து வருபவர் சத்யா (வயது 50). இவரின் மனைவி நாகம்மாள். தம்பதிகளுக்கு சந்துரு, முனுசாமி (வயது 25), சதீஷ் என 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களில் முனுசாமி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: என் கூட வாழமாட்டியா? கள்ளக்காதலனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!
வாடகை வீடு:
பின் பெற்றோரை எதிர்ப்பை மீறி பெண்ணை கரம்பிடித்த நிலையில், இருவரும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். திருமணத்துக்குப்பின் முனுசாமி தனது பெற்றோரிடம் சொந்த வீடு கட்ட இடம் அல்லது பணம் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார்.
மறுப்பு:
சத்யா மகனுக்கு பணம் தர மறுப்பு தெரிவித்த காரணத்தால், இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்ப பிரச்சனை நிலவி வந்துள்ளது. நேற்று முன்தினத்தில் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் முற்றிய நிலையில், முனுசாமி - அவரின் சகோதரர் சதீஷ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
கொலை:
இதனிடையே, சம்பவத்தன்று முனுசாமி கஞ்சா போதையில் வந்துள்ளார். சதீஷ் இருந்ததை பார்த்தவர் மினிலாரியை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனைக்கண்ட சத்யா மகன் சதீஷை காப்பாற்ற தள்ளிவிட்ட நிலையில், சத்யா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கைது:
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முனுசாமியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.!