"பொம்பள பேர்ல கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்க மாட்டியா..." இளம் பெண் கடத்தல் முயற்சி.!! 6 பேர் கைது.!!
பொம்பள பேர்ல கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்க மாட்டியா... இளம் பெண் கடத்தல் முயற்சி.!! 6 பேர் கைது.!!
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் வசித்து வரும் விஜய் மற்றும நிகாரிகா தம்பதியுடன், நிகாரிகா தங்கையான வர்ஷா(24) தங்கியுள்ளார். இந்நிலையில் வர்ஷா பெயரில் உள்ள வண்டியின் ஆர்.சி புக்கை வைத்து தம்பதி கடன் வாங்கியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்களகியும் கடனை திரும்பத் தராமல் இருந்துள்ளனர்.
நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பலமுறை விஜயின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதிலும் அவர் பணம் செலுத்தவில்லை. இதனால் கோபமடைந்த நிதி நிறுவனர்கள் ஹரி பிரகாஷ், பிரவீன் குமார், கிருஷ்ணவேணி உட்பட 6 பேர் சம்பவம் நடந்த இரவு விஜய் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று கதவை தட்டிய அவர்கள் உள்ளே நுழைந்து நிகாரிகாவை தள்ளிவிட்டு நுழைந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிகாரிகா கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். உள்ளே சென்ற 6 நபர்கள் வர்ஷா பெயரில் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை செலுத்தவில்லை என விஜயை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். மேலும் அந்த 6 பேரும் திடீரென வர்ஷாவை பிடித்து இழுத்து காரில் கடத்த முயற்சி செய்துள்ளார்கள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த கும்பலிடமிருந்து வர்ஷாவை காப்பாற்றியுள்ளனர்.
பொதுமக்களை கண்டு பயந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனைவியின் தங்கையை அடித்ததால் கோபமடைந்த விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீன் குமாரை தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விஜய் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!
இதையும் படிங்க: துபாயில் வேலை பார்க்கும் கணவர்! பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்! பகீர் சம்பவம்...