துபாயில் வேலை பார்க்கும் கணவர்! பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்! பகீர் சம்பவம்...
திருவாரூர் மாவட்டத்தில் துபாயில் வேலை பார்த்து வந்த கணவருடன் ஏற்பட்ட தொலைபேசி சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளான சுஜாதா தீவைத்து தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை அருகே உள்ள ஓட்டக்குடி பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் மற்றும் சுஜாதா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். பிரபாகரன் துபாயில் வேலை செய்து வருவதால், கணவன்-மனைவிக்கிடையே செல்போன் வழியாகவே உரையாடல் நடந்தது. ஆனால், இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
சம்பவ நாளன்று, வழக்கம்போல் ஏற்பட்ட சண்டையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஜாதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டினர் உடனடியாக ஓடி வந்து சுஜாதாவை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருமணம் ஆகி 3 மாதம் தான்! தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ! காரில் வெளியே சென்ற புதுப்பெண்! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
காவல்துறை விசாரணை
சுஜாதாவின் தந்தை கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்....