×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேருக்கு நேர் மோதிய கார் - டீசல் டேங்கர்.. 6 பேர் அடுத்தடுத்து பரிதாப பலி.. திருப்பூரில் மரண ஓலம்.!

Tiruppur Accident: டீசல் லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சோகம் திருப்பூரில் நடந்துள்ளது.

Advertisement

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

6 பயணிகள்:

Tamil Nadu Accident: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, விஜயமங்கலம் சாலையில், காக்கா பள்ளம் அருகில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இதே சாலையில் காரும் எதிர்திசையில் பயணித்தது. காரில் பெண்கள், சிறார்கள் என 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

இதையும் படிங்க: தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

நேருக்கு நேர் மோதி:

இதனிடையே, எதிர்பாராத விதமாக சாலையில் டேங்கர் லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பயங்கர சேதமான நிலையில், ரத்த வெள்ளத்தில் காரில் இருந்த 6 பேரும் துடிதுடித்துள்ளனர்.

மீட்பு பணிகள்:

அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மீட்பு பணியில் முதற்கட்டமாக ஈடுபட்ட நிலையில், ஊத்துக்குளி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த 2 பேரின் சடலத்தை மீட்டனர். 4 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விசாரணை:

பின் இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை என்பதால் அதிகாரிகளின் விசாரணை தொடருகிறது. 2 பெண்கள், 2 சிறார்கள் என 6 பேர் உயிரிழந்த நிலையில், லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.! பெரும் சோகம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tiruppur Accident #Car Diesel Tanker
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story