×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

Ranipet News: டூவீலர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி தாத்தா-பேரன்-பேத்தி என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

3 பேர் பலி:

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று சேர்ந்துகொண்டு இருந்தது. இந்த வாகனம் மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: #Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.! 

விபத்து:

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நிலையில், விபத்தில் தாத்தா-பேரன்-பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் 4 குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இந்த சோகம் நடந்துள்ளது.

காவல்துறை விசாரணை:

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: #JustIN: தறிகெட்ட அரசுப்பேருந்தால் கோர விபத்து.. தம்பதி, குழந்தை உட்பட 7 பேர் பலி.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.. சேலத்தில் துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Ranipet #விபத்து #மரணம் #சென்னை பெங்களூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story