பெண்களிடம் அத்துமீறியதாக புகார்.. களத்தில் இறங்கிய ‘சிங்கப்பெண்’ போலீஸ்!
பெண்களிடம் அத்துமீறியதாக புகார்.. களத்தில் இறங்கிய ‘சிங்கப்பெண்’ போலீஸ்!
தென்காசி அருகே ஆலங்குளத்தில் கடைகளுக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, சைகைகள் காட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி அருகே ஆலங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த மகாராஜா (50) என்பவர், துத்திகுளம் சாலையில் கடைகளுக்குச் செல்லும் பெண்களிடமும், அருகில் வசிக்கும் பெண்களிடமும் ஆபாசமாகப் பேசி, சைகைகள் காட்டியதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த புகாரின் அடிப்படையில், தென்காசி மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்ராணி தலைமையிலான போலீசார் மகாராஜாவை பிடித்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜாவை கைது செய்தனர்.
இதையும் படிங்க: “எங்களுக்கு நடந்த கொடுமை இதுதான்”.. பெற்றோரிடம் கதறிய 4 மாணவிகள்; பள்ளியில் பரபரப்பு!
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து புகார் வந்தவுடன் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!