தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 5-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 6) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய ரயில்வேயின் தற்போதைய விதிமுறைப்படி, ரயில் பயணத்திற்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக தொடங்குகிறது. தொடக்க நாளில் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நவம்பர் 5-ம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதேபோல், நவம்பர் 6-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 7) காலை 8 மணிக்கு தொடங்கும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?
2026-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நவம்பர் 5, 6 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி காலத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில் டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதால், பயணிகள் முன்பதிவு தொடங்கும் நேரத்திலேயே டிக்கெட் எடுப்பது வசதியாக இருக்கும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?