×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனை முடிக்க மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! போலீஸ்க்கே ட்விஸ்ட் தான் போங்க... ஒரே நாளில் காட்டிக்கொடுத்த ரத்தக் கறை! ஓமலூர் தொழிலதிபர் கொலையில் அம்பலமான கொடூரம்....!!!

சேலம் ஓமலூர் அருகே வழிப்பறி என நாடகமாடி கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையர்கள் கொலை செய்து நகைகளை பறித்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மனைவியே கொலைக்கு திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவி சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது காதலன் சந்தோஷ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழிப்பறி என கூறிய மனைவி

வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த பூபதி, நேற்று முன்தினம் அதிகாலையில் தனது மகனுக்கு எந்திரம் கட்டுவதற்காக காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப் பாலம் அருகே மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொன்று, அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி சுஜிதாஸ்ரீ போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! மதுபானம் கொடுத்து அடிமையாக்கி ஒரு வருஷமாக மாறி மாறி சீரழிப்பு... ஆசிரியர் மூலம் வெளிவந்த உண்மை! சேலத்தில் நடந்த அதிர்ச்சி!!!

தகவலறிந்து அங்கு சென்ற ஓமலூர் போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடந்த விசாரணையில், காரில் ரத்தக்கறை அல்லது வெட்டுக்காயங்களுக்கான தடயங்கள் இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், சுஜிதாஸ்ரீக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதும் கவனிக்கப்பட்டது.

வீட்டில் சிக்கிய தடயங்கள்

இதையடுத்து போலீசார் பூபதியின் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு ரத்தக்கறைகளை அழித்ததற்கான தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில், சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவனை கொலை செய்துவிட்டு வழிப்பறி நடந்ததாக நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சுஜிதாஸ்ரீயின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த திருமணமாகாத ஐடி ஊழியர் சந்தோஷ்ராஜ் (33) என்பவருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதை பூபதி அறிந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலனுடன் சேர்ந்து கொலை

சம்பவத்தன்று சுஜிதாஸ்ரீ சந்தோஷ்ராஜை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து பூபதியை தலையணையால் அமுக்கிக் கொல்ல முயன்றபோது அவர் தினறியதாக கூறப்படுகிறது. பின்னர் சுஜிதாஸ்ரீ அரிவாள் மனையாலும், சந்தோஷ்ராஜ் கத்தியாலும் பூபதியை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு அதிகாலை 4 மணி வரை இருவரும் காத்திருந்தனர். பின்னர் பூபதியின் உடலை காரின் முன்சீட்டில் படுக்க வைத்து, சுஜிதாஸ்ரீ குழந்தைகளுடன் பின்சீட்டில் அமர்ந்துள்ளார். சந்தோஷ்ராஜ் காரை ஓட்டிச் சென்று ஆட்டுக்காரனூர் ஆற்றுப் பாலம் அருகே நிறுத்தியுள்ளார்.

அங்கு சுஜிதாஸ்ரீ அணிந்திருந்த நகைகளை கழற்றி சந்தோஷ்ராஜிடம் கொடுத்ததாகவும், அதன் பின்னர் வழிப்பறி நடந்ததாக போலீசாரிடம் கூறி நாடகமாடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓமலூர் போலீசார் உண்மையை கண்டறிந்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இதையும் படிங்க: ஐயோ... கடவுளே! இறப்பு தான் எல்லாத்துக்கும் முடிவா? கணவன், மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் RIP பதவி.. ஒட்டுமொத்த குடும்பமே பரிதாப பலி! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சேலம் கொலை #ஓமலூர் Murder Case #Salem crime #கணவன் கொலை #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story