×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! மதுபானம் கொடுத்து அடிமையாக்கி ஒரு வருஷமாக மாறி மாறி சீரழிப்பு... ஆசிரியர் மூலம் வெளிவந்த உண்மை! சேலத்தில் நடந்த அதிர்ச்சி!!!

சேலம் கொண்டலாம்பட்டியில் 13 வயது பள்ளிச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது பள்ளிச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 14 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூங்காவுக்கு சென்ற சிறுமிக்கு மதுபானம் கொடுத்ததாக புகார்

கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் பூங்காவுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் சிறுமிக்கு திட்டமிட்டு மதுபானம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டில் சார்ஜ் போட வந்த வாலிபர்....! திடீரென வயிற்று வலியில் துடித்த 15 வயது சிறுமி.! மருத்துவமனையில் தாய்க்கு அம்பலமான பகீர் உண்மை!!!

பின்னர், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படும் அந்தக் கும்பல், சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக பலமுறை இந்தக் கொடுமை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் 

நாட்கள் செல்லச் செல்ல சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதுடன், உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதை கவனித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

4 பேர் கைது; மேலும் 14 பேரிடம் விசாரணை

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சிறுமிக்கு எதிரான குற்றத்தில் நேரடியாக தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமிக்கு மதுபானம் வழங்கியது யார், இந்தக் குற்றத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறிய சேலம் மாநகர காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை விசாரணை மூலம் இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சேலம் சிறுமி #Pocso Case #கூட்டு பாலியல் வன்கொடுமை #Salem crime #போக்சோ சட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story