×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை? முதிய தம்பதிகளுக்கு நேர்ந்த பயங்கரம்..! 

முதிய தம்பதி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

Advertisement

வயதான தம்பதிக்கு கொடூரமாக நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

தம்பதிகள்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி, குண்டுக்கல், ராமப்பக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 85). இவரின் மனைவி அமராவதி (வயது 70). தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனது குடும்பத்துடன் கொண்டிரெட்டியூர் பகுதியில் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!

தென்னைமட்டை பின்னும் தொழில்: 

இதனால் வயதான தம்பதிகள் இருவரும் சின்னத்திருப்பதி செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் தென்னைமட்டை பின்னும் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களின் பேரன் நவீன் தினமும் தம்பதிகளுக்கு உணவு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

சடலம்: 

இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் தாத்தா - பாட்டிக்கு உணவு கொடுக்க வந்தபோது, அவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இவர்களின் குடும்பத்தினர் & தீவட்டிப்பட்டி kaval துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

கொலை: 

இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தம்பதிகளின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் மாயமானது தெரியவந்தது. இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா? வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: அக்காவுக்கா செக்ஸ் டார்ச்சர் கொடுக்குற? கொழுந்தனார் கொடூர கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Salem #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story