நகைக்காக புதைக்கப்பட்ட உறவினரின் சடலத்தை தோண்டி எடுத்த சொந்தக்காரர்.. கோவையில் பதறவைக்கும் சம்பவம்.!
நகைக்காக முதியவரின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
நகையுடன் புதைக்கட்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து நகை திருடிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
நல்லடக்கம்:
Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம், உடையாம்பாளையம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 60). இவர் மீன் வியாபாரி ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 06ம் தேதி இவர் உயிரிழந்த நிலையில், சவுரிபாளையம் சுடுகாட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!
நகையுடன் புதைப்பு:
நல்லடக்கத்தின்போது, நாகராஜின் விருப்பப்படி மீன் டாலருடன் இருந்த 3 சவரன் தங்க நகையை வைத்து புதைத்துள்ளனர். பின் காரியம் செய்ய உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தினை சுத்தப்படுத்த ஜூன் 19ம் தேதியன்று நாகராஜின் மகன் வெங்கடேஷ்குமார் (வயது 32) மற்றும் உறவினர்கள் சுடுகாட்டுக்குச் சென்றுள்ளனர்.
சந்தேகம்:
அப்போது, தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மண் சிதறி சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்துள்ளது. துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் சுடுகாட்டை பராமரித்து வந்த கார்த்திகேயன் என்பவரிடம் விசாரித்து இருக்கின்றனர். அப்போது, முதலில் மழுப்பிய நபர், பின் ஜூன் 16ம் தேதி நாகராஜின் உறவினர் சக்திவேல் (வயது 35), அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் (வயது 46) ஆகியோர் புதைத்த இடத்தை தோண்டி நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதிகாரிகள் விசாரணை:
மேலும், ஆசிட் ஊற்றி கழுவி உருக்கிய நகையை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கார்த்திகேயனிடம் கொடுத்துச் சென்றதும் உறுதியானது. இதனையடுத்து, வெங்கடேஷ் குமார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் சக்திவேல், மணிகண்டன், கார்த்திகேயனின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான மூவருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!