அதிர்ச்சி! நாளை முதல் 1.58 கோடி ரேஷன் கார்டுகள் முடக்கம்! இனி ரேஷனில் பொருள் வாங்க முடியாது... மத்திய அரசு கொடுத்த ஷாக்!!!
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத 1.58 கோடி அட்டைகள் அக்டோபர் 1 முதல் முடக்கப்பட உள்ளன.
ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை உணவுப் பொருட்கள் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை பூர்த்தி செய்யாத சுமார் 1.58 கோடி ரேஷன் கார்டுகள் அக்டோபர் 1 முதல் முடக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தடுக்க பயோமெட்ரிக் பதிவு
போலி ரேஷன் கார்டுகள், ஒரே நபரின் பெயர் பல குடும்ப அட்டைகளில் இடம்பெறுவது, இறந்தவர்களின் பெயரில் உணவுப் பொருட்கள் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் அடையாளத்தையும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை... அனைத்து ரேஷன் கார்டுக்கும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிட்டாத்தீங்க...!!!
அக்டோபர் 1 முதல் ரேஷன் கார்டுகள் முடக்கம்
கைவிரல் ரேகைப் பதிவை இதுவரை பூர்த்தி செய்யாத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த அட்டைகளை பயன்படுத்தி நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட மானிய விலை உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும்.
பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கம்
மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் கைவிரல் ரேகைப் பதிவை மேற்கொள்ளாவிட்டால், அவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவு தொடர்பான நிலையை சரிபார்த்துக் கொள்வது முக்கியமாகியுள்ளது.
மானிய விலை உணவுப் பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு தடையின்றி சென்றடையவும், ரேஷன் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும் இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை... அனைத்து ரேஷன் கார்டுக்கும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிட்டாத்தீங்க...!!!