×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை... அனைத்து ரேஷன் கார்டுக்கும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிட்டாத்தீங்க...!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் eKYC சரிபார்ப்பை 100 சதவீதம் நிறைவு செய்ய இன்று செப்டம்பர் 19 சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Advertisement

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் eKYC சரிபார்ப்பை முழுமையாக நிறைவு செய்யும் வகையில், இன்று (செப்டம்பர் 19) மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நியாயவிலைக் கடைகளில் இந்த முகாம் நடக்கிறது. பொதுமக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் சென்று தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

நியாயவிலைக் கடைகளில் இன்று சிறப்பு முகாம்

குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை சரிபார்த்து, eKYC பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே eKYC செய்யாதவர்கள் முகாமை பயன்படுத்தி தங்களது விவரங்களை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! தமிழர்களின் 7 கோடி ரேஷன் கார்டுகளின் ரகசிய தகவல்கள் திருட்டு? தமிழக அரசுக்கு CERT-In அதிரடி எச்சரிக்கை...!!!

ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும்

முகாமுக்கு வரும் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் மூலம் தேவையான சரிபார்ப்புகளை மேற்கொள்ள முடியும்.

மதுராந்தகம், தாராபுரத்தில் முகாம் இல்லை

இடைத்தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் மட்டும் இன்று இந்த சிறப்பு முகாம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பகுதிகளிலும் eKYC சரிபார்ப்பு முகாம் வழக்கம்போல் நடைபெறும். இதனால், இன்னும் eKYC செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பயன்பெறலாம்.

 

இதையும் படிங்க: ஐயோ... காப்பாத்துங்க! நடுரோட்டில் தேனீக்கள் கூட்டத்தில் சிக்கிய இளம்பெண்...! கதறி துடித்த கொடூரம்.... அதிர்ச்சி வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#குடும்ப அட்டை #eKYC #ரேஷன் கார்டு #ஆதார் அட்டை #நியாயவிலைக் கடை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story