நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!
பொங்கல் விடுமுறைக்கு பின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல். கூடுதல் விடுமுறை அளிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்கள், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் விடுமுறை முடிவு
ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி முடித்துள்ளனர்.
நகரங்களை நோக்கி திரும்பும் பயணம்
விடுமுறை முடிந்ததால், தற்போது மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கித் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக முக்கிய சாலைகளில் Traffic Congestion முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: நாகை மாவட்டத்திற்கு( டிச 1) உள்ளூர் விடுமுறை! தொடர்ந்து 2 நாள்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.!
பெற்றோர் கோரிக்கை
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டால், பயணிகள் நிதானமாகச் செல்ல முடியும் என்றும், கூட்ட நெரிசல் குறையும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. போக்குவரத்து நெரிசல் குறையும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் சமூக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை.....? வெளியான முக்கிய தகவல்!!!