மார்னிங் மகிழ்ச்சி செய்தி! பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை.....? வெளியான முக்கிய தகவல்!!!
பொங்கல் விடுமுறை தொடர்ச்சியாக 5 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில், ஜனவரி 19-ம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு பெருமளவில் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் பணிக்கும் கல்வி நிலையங்களுக்கும் திரும்பும் நாள் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
ஜனவரி 19 விடுமுறை கோரிக்கை
ஜனவரி 14 முதல் 18 வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 19-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பணிக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்புவது சிரமமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒரே நாளில் பலரும் ஊரிலிருந்து திரும்புவது போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண அலைச்சலை ஏற்படுத்தும் என்பதால், மாணவர்களின் நலன் மற்றும் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 19-ம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசு தரப்பு நிலை
இதுவரை ஜனவரி 19-ம் தேதி விடுமுறை குறித்து தமிழக அரசு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் விடுமுறை அறிவிக்கப்படாவிட்டால், பொதுமக்கள் சிரமமின்றி திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000....? ரெடியா இருங்க....!
போக்குவரத்து ஏற்பாடுகள்
வெளியூர்களுக்குச் சென்றவர்கள் ஒரே நாளில் திரும்பும் சூழல் ஏற்பட்டால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பொங்கல் விடுமுறை நீட்டிப்பு குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மாணவர்களின் நலன், பணியாளர்களின் பயண சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு என்ன தீர்மானம் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு.... தமிழக அரசுக்கு கூடுதல் நெருக்கடி..!!