ஹாப்பி நியூஷ்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு! ஜனவரி 7 ஆம் தேதி..... தமிழக அரசின் புதிய முடிவு.!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக தேதி உறுதி; ரொக்க பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே அரசு அறிவிக்கும் பரிசு தொகுப்பு மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக தேர்தல் நெருங்கும் ஆண்டுகளில் இந்த அறிவிப்புகள் அதிக கவனத்தை ஈர்க்கும் நிலையில், 2026 பொங்கல் தொடர்பான தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பொங்கல் பரிசு தொகுப்பு – கடந்த ஆண்டுகளின் நிலை
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
2025ல் ரொக்கம் வழங்கப்படாத காரணம்
ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நிதி பற்றாக்குறை காரணமாக ரொக்க பணம் வழங்கப்படவில்லை. அப்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மட்டும் விநியோகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: புதிய திட்டம்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
2026 தேர்தல் ஆண்டு – எதிர்பார்ப்பு அதிகம்
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மீண்டும் ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பரிசு தொகுப்பு விநியோக தேதி
கடந்த ஆண்டைப் போலவே, வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே, அதாவது ஜனவரி 7ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரொக்க பணம் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் உறுதியானது மக்களுக்குச் சிறிய நிம்மதியை அளித்துள்ளது. தேர்தல் ஆண்டானதால், அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் 2026 பொங்கல் தொடர்பாக மேலும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!