×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ராதிகா வீட்டு பணிப்பெண் மகனுக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்.! செல்போன் சிக்னலால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை... போலிஸ் காட்டிய அதிரடி!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாயமான 19 வயது இளைஞர் பிரசாந்த், முன்விரோதம் காரணமாக நண்பர்களால் கொலை செய்யப்பட்டு பொன்னேரி கடற்கரையில் புதைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்.

Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாயமான 19 வயது இளைஞர் பிரசாந்த், நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டு பொன்னேரி கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிரசாந்தின் உடலை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தாயைப் பார்க்கச் சென்ற இளைஞர் மாயம்

சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த், டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் எழில்செல்வி, சென்னையில் நடிகர் சரத்குமார் - ராதிகா வீட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 27-ம் தேதி தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட பிரசாந்த், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதையும் படிங்க: CM விஜய்யின் தீபாவளி பரிசு! இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் தமிழக அரசு... எதிர்பார்பில் மக்கள்..!!!

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பிரசாந்தின் மாமா ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

செல்போன் சிக்னல் மூலம் நண்பர்கள் மீது சந்தேகம்

பிரசாந்தின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் விவரங்களை ஆய்வு செய்த போலீசார், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்களான தேவராசு (18), தினேஷ் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், பிரசாந்துக்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து இருவரும் தாக்கிக் கொலை செய்ததாகவும், பின்னர் அங்கேயே குழி தோண்டி உடலைப் புதைத்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இருவர் கைது; உடலை மீட்க நடவடிக்கை

இதையடுத்து தேவராசு, தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான முழுமையான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பொன்னேரி கடற்கரை பகுதியில் புதைத்த  பிரசாந்தின் உடலை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாயமான இளைஞர் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் சிறுவத்தூர் கிராமத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: வேற லெவல்... அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி! CM விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பண்ருட்டி கொலை #பிரசாந்த் மாயம் #Youth murder #Ponneri Beach #கடலூர் போலீஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story