×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட பெயிண்டர்.. விசாரணையில் வெளியான பகீர் உண்மை.. கள்ளக்காதல் மோகம் உயிர்பறித்த சோகம்.! 

Thiruvallur News: கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

Advertisement

பெயிண்டரை கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

குற்ற வழக்கில் தொடர்புடையவர்: 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றத்தூர் பகுதியில் வசித்து வருபவர் மாரி ரூபன் (வயது 32). இவர் பெயிண்டர் ஆவார். அடிதடி உட்பட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அடிக்கடி சிறைக்கும் சென்று வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மின்வாரிய அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்து கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டு, வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்தும் இட்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க: காதல் திருமணத்தில் வந்த கசப்பு.. கள்ளக்காதல் வயப்பட்டு விபரீதம்.. விசிக பிரமுகர் கொலை வழக்கில் பகீர் தகவல் அம்பலம்.! 

கையெழுத்திட்டு வந்தவர்.. 

நேற்று காலை சுமார் 11 மணியளவில் இவர் வழக்கம்போல நண்பர் வெங்கடேசன் என்பவருடன் காவல் நிலையம் சென்றவர், அங்கு கையெழுத்திட்டு பின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் தாமரைப்பக்கம் கூட்டுசாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. 

கொடூர கொலை: 

இந்த சம்பவத்தில் நிலைதடுமாறி விழுந்த இருவரையும், காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் கத்தி-அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்துடன் வெட்டியது. மாரி உயிர்தப்பி ஓடிய நிலையில், அவரை ஓடஓட விரட்டி கும்பல் வெட்டிக்கொலை செய்தது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலை சம்பவத்தால் மக்கள் அலறிப்போயினர். இந்த சம்பவத்தில் மாரி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விசாரணை: 

முகம் சிதைக்கப்பட்டு, கை மணிக்கட்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த சடலத்தை கண்டு அவ்வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரில் தப்பிச்சென்ற கும்பல் ஒரு வீட்டின் சுவரில் இடித்து மோதி விபத்தை ஏற்படுத்த, பொதுமக்கள் 3 பேரை பிடித்து அடித்து நொறுக்கினர். இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டது. 

அதிர்ச்சி தகவல்: 

பின் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தீனா (வயது 25), நரேஷ் (வயது 20), விக்கி (வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய பேரரசு (வயது 19), ராஜ்குமார் (வயது 20) ஆகியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. அதாவது, தீணாவின் திருமணமான சகோதரி தீபாவுடன் மாரி கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் தீபாவின் கணவர் மனைவியை அடித்து தாய் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் இதுதொடர்பான பிரச்சனையில், வீட்டில் இருந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சகோதரியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, அவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாரியை கொலை செய்ய தீனா திட்டமிட்டு செயல்பட்டது அம்பலமானது. 

இதையும் படிங்க: ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கணவன் செய்த பகீர் சம்பவம்.! வங்கி அருகில் கொடூரம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Crime news #thiruvallur #கள்ளக்காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story