×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கணவன் செய்த பகீர் சம்பவம்.! வங்கி அருகில் கொடூரம்..!

Krishnagiri News: மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

நிலம் விற்பனை செய்த பணத்துடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். 

தம்பதி: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி, கும்ளாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 39). இவர் கூலித் தொழிலாளி ஆவார். நாராயணசாமியின் மனைவி வித்யா (வயது 30). தபதிகளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: மைத்துனர் மனைவியுடன் உல்லாசம்.. நடுரோட்டில் நடந்த கொடூர கொலை சம்பவம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.! 

கள்ளக்காதல்: 

இதனிடையே, வித்யாவுக்கும் - அதே ஊரில் வசித்து வந்த கார்பெண்டர் புனித் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஓராண்டாக தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த நாராயணசாமி மனைவியை கண்டித்து இருக்கிறார். 

பஞ்சாயத்து: 

இதனை கண்டுகொள்ளாத மனைவி கள்ளக்காதலை தொடர்ந்த நிலையில், தம்பதியிடையே தகராறு அதிகரித்துள்ளது. இதனால் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி இருக்கின்றனர். இதனிடையே, வித்யா தனது பெயரில் எழுதி இருக்கும் 8 சென்ட் நிலத்தில், 1500 சதுர அடியை ரூ. 22 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். 

ஓட்டம்: 

இந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முன்னதாக கள்ளக்காதலனுடன் வித்யா ஓட்டம் பிடித்தார். இந்த தகவலை அறிந்த நாராயணசாமி கடுமையான ஆத்திரத்தில் இருந்த நிலையில், தனது வங்கிக்கணக்கில் இருக்கும் மீதி பணத்தையும் எடுக்க வித்யா வங்கிக்கு வந்துள்ளார். 

தகராறு: 

இந்த தகவலை அறிந்த நாராயணசாமி, பணம் மற்றும் சொத்துக்களை குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு சண்டையிட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகவே, ஆத்திரமடைந்த கணவர் வித்யாவை கல்லால் தாக்கி இருக்கிறார். இதனால் தப்பி ஓட முயன்ற மனைவியை விடாமல் துரத்தி தலை, முகத்தில் ஆவேசமாக தாக்கி இருக்கிறார்.  

மரணம்: 

இந்த சம்பவத்தில் வித்யா நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர், வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நாராயணசாமியை கைது செய்தனர். 

இதையும் படிங்க: என் கூட வாழமாட்டியா? கள்ளக்காதலனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Crime news #Krishnagiri
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story