×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காப்பக உரிமையாளர் கைது.!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காப்பக உரிமையாளர் கைது.!!

Advertisement

ஒசூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பக உரிமையாளர் உட்பட 5  பேரை அதிரடியாக கைது செய்து போக்சோவில்  அடைத்தது மகளிர் காவல் ஆணையம்.

ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் திண்ணூர் பகுதியில் பெசோ என்ற பெயரில் தனியார் காப்பகம் கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதை திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சாம் கணேஷ் என்ற 61 வயது நபர் நிர்வகித்து வந்துள்ளார். இந்த  வளாகத்திற்குள் பள்ளியும் செயல்படுகிறது. இங்கு ஃபிரிகேஜி முதல் 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. காப்பகத்தில் ஆண், பெண் என 33 பேர் தங்கியுள்ளனர். மேலும் தாளாளாருடன் அவரது  மனைவி ஜோஸ்பின் என்பவர் பள்ளியில்  ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு காப்பக நிர்வாகியும் பள்ளி தாளாளருமான சாம் கணேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசாரிடம் புகாரளித்தார். விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து சிறுமிக்ககு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தபட்ட நபர்களை  போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் தொல்லை; லேப் அசிஸ்டன்ட் கைது.! சஸ்பெண்ட் செய்து உத்தரவு.!

இந்த சம்பவம் வெளியில் தெரியாமலிருக்க தாளாளரிடம் பணம் பெற்று உண்மையை மறைத்த ஒசூரை சேர்ந்த நாதா முரளி, செல்வராஜ் மற்றும் தாளாளர் மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா ஆகிய 5 பேரையும் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Hosur #sexual abuse #Orphanage Scandals #Owner Arrested Under Pocso
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story