"மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!
மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!
திருச்சியில் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பேராசிரியரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியின் மணிகண்டம் பகுதியில் பிரபலமான பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் கே.கே நகரை சேர்ந்த தமிழ்(52) என்பவர் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இ.சி.இ முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆய்வகப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது 17 வயது மாணவியை தனது அறைக்கு அழைத்திருக்கிறார் பேராசிரியர் தமிழ்.
இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்ற மாணவியிடம் செல்போன் வாங்கி தரட்டுமா.? என கேட்ட பேராசிரியர் தமிழ் மாணவியை வலுக்கட்டாயமாக கட்டி பிடிக்க முயன்றுள்ளார். மேலும் மாணவியின் அங்க அளவுகளை கேட்டு ஆபாசமாக பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவியை முத்தமிட முயன்றுள்ளார். இதனையடுத்து பேராசிரியரிடம் இருந்து தப்பித்த மாணவி இது குறித்து கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடமும் புகாரளித்துள்ளார். ஆனால் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதன் பிறகு தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் கல்லூரிக்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் தமிழை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!