×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Nainar Nagendran: தேமுதிகவுடன் கூட்டணி? நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்.!

Nainar Nagendran Pressmeet: தேமுதிக உடன் கூட்டணி பேச்சு இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு வெற்றி மட்டுமே. ஆட்சிப் பங்கு தொடர்பான கோரிக்கை இல்லை என பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

BJP Nainar Nagendran Latest Speech: திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "தேமுதிக உடன் கூட்டணி குறித்து பரவி வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “தேமுதிக உடன் இதுவரை எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே இலக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே. ஆட்சியில் பங்கு போன்ற எந்த கோரிக்கையும் எங்களிடம் இல்லை.

இதையும் படிங்க: MK Stalin: காங்கிரசின் மறைமுக கோரிக்கையில் விழுந்த மண்.. அதிரடியாக கர்ஜித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.!

NDA கூட்டணிக்கு மாபெரும் வெற்றி:

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பேசியது திமுகவின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சியில் நீடித்த வரலாறு இல்லை. ஆட்சிக்கு வர முடியாது என்ற சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி பற்றி பேசுவது அவர்களின் அரசியல் பலவீனத்தை காட்டுகிறது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தோல்வி பயம் வந்துவிட்டது:

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது காங்கிரஸ், விஜயின் கட்சியுடன் செல்லுமா? என்பதே இப்போது அரசியல் வட்டாரங்களில் கேள்விக்குறியாக உள்ளது. கனிமொழி தொடர்ந்து காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுக தலைமைக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே இவ்வாறு கருத்துகள் வெளிப்படுகின்றன. திமுக அரசு பிறர் கொண்டு வந்த திட்டங்களை தங்களுடையதாகக் கூறுவது வழக்கமாகி விட்டது.

முதல்வர் வேட்பாளர்:

நீட் தேர்வு விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் பேசி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதே நேரத்தில், திமுகவில் குடும்ப அரசியல் வெளிப்படையாக தெரிகிறது. நேற்று கலைஞர், இன்று ஸ்டாலின், நாளை உதயநிதி என்ற சூழல் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்" என பேசினார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #Nainar Nagendran #BJP DMDK #aiadmk alliance #தமிழக அரசியல் #நயினார் நாகேந்திரன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story