×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

MK Stalin: காங்கிரசின் மறைமுக கோரிக்கையில் விழுந்த மண்.. அதிரடியாக கர்ஜித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.!

DMK Vs Congress: ஆட்சியில் பங்கு கோரிக்கை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. அதற்கான சதி முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் என திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

உடைத்து பேசிய முதல்வர்:

MK Stalin Latest Speech: சென்னையில் இந்தியா டுடே சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து ஒன்றுபட்டே செயல்படும். "ஆட்சியில் பங்கு" குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. திமுகவும் காங்கிரஸும் ஒற்றுமையாக இருப்பதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு பரப்பும் கோஷமே இந்த விவகாரம்.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்! தவெக கட்சியுடன் கூட்டணி இல்லை..... விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய பிரபலம்.!

ராகுல் என் தம்பி:

திமுக கூட்டணியில் முறிவு ஏற்படும் என்ற பேச்சுகள் முற்றிலும் ஆதாரம் இல்லாதவை. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த சதி குறித்து திமுகவும் கவலைப்படவில்லை, கூட்டணிக் கட்சிகளும் கவலைப்படவில்லை. திமுக - காங்கிரஸ் உறவு அரசியலைத் தாண்டிய உறவு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னுடைய சகோதரர்.

திமுக கூட்டணி மகத்தான வெற்றி:

திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். 2021 தேர்தலைவிட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் பேச்சுகள் மக்களை குழப்புவதற்கான முயற்சியே தவிர, உண்மையல்ல. 2021 தேர்தலைவிட 2026ல் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம்" என்று தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சு வாயிலாக தேசிய காங்கிரஸ் தலைமை திமுகவுக்கு ஆட்சியில் பங்கு குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் காங்கிரஸ் தரப்பில் பேசுவோர் வைக்கும் கோரிக்கைக்கு நேரடி மறுப்பு பதிலாகவும் இது கவனிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MK Stalin #DMK Congress Alliance #முக ஸ்டாலின் #திமுக #திமுக காங்கிரஸ் கூட்டணி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story