×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலி தற்கொலை செய்த சோகத்தில், கள்ளக்காதலன் விபரீதம்.. ஷாக் பின்னணி.! 

Nilgiris News: கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

Advertisement

என் கணவரை நான் கண்டிக்கிறேன், உன் மனைவியை நீ கண்டித்து வை என கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பிரச்சனையால் பெண் தற்கொலை செய்துகொண்டார் என சொல்லப்படுகிறது.  

நண்பரின் மனைவி: 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, ரோஸ் காட்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 48). இவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சிவகுமாரின் மனைவி சுஜாதா (வயது 40). தம்பதிகளுக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர். சிவகுமாரின் நண்பர் அச்சுதானந்தன். இவர் காம்பாய்கடை பகுதியில் வசித்து வருகிறார். அச்சுதானந்தன் - சுஜாதா இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு நீ, வாழ்க்கைக்கு அவ.. பண விவகாரத்தில் கள்ளக்காதலியை கணவருடன் சேர்த்து தீர்த்துக்கட்டிய போலீஸ்காரர்.. பதறவைக்கும் சம்பவம்.! 

கண்டிக்க கோரிக்கை: 

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அச்சுதானந்தனின் மனைவி பரிமளா, சிவகுமாரை நேரில் அழைத்து இதுதொடர்பாக தெரியப்படுத்தி, சிவகுமாரின் மனைவியை கண்டிக்க கூறியுள்ளார். மேலும், தானும் தனது கணவரை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். 

தற்கொலை: 

இந்நிலையில், சம்பவத்தன்று சுஜாதா கணவரை அவசரமாக வீட்டுக்கு வருமாறு கூறி இருக்கிறார். இதனால் பதறிப்போன சிவகுமார் உடனடியாக வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு கதவை தட்டியும் பலனில்லை. பின் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அலறி இருக்கிறார். 

மரணம் உறுதி:  

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சுஜாதாவை மீட்டு மருத்வவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. சுஜாதாவின் மரணம் குறித்த தகவல் அறிந்த அச்சுதானந்தனும் விஷம் குடித்ததால், சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: 12 பேர் சேர்ந்து மாணவரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. சென்னையில் நடந்த திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு தகவல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Nilgiris #illegal affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story