நள்ளிரவில் முதல்வர் விஜய் வீட்டின் பின்புறம்.. அரிசி பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை..! தாய், மகள் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்... பகீர் சம்பவம்..!!!
சென்னை நீலாங்கரையில் அரிசி பையில் வைக்கப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் தாய், பாட்டி அடையாளம் காணப்பட்டு விசாரணை நடக்கிறது.
சென்னை நீலாங்கரையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை, அரிசி பையில் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோட்டில் கிடந்த குழந்தையை, முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக மீட்டனர். தற்போது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரிசி பையில் கிடந்த பச்சிளம் குழந்தை
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, 10 கிலோ அரிசி பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஒரே வகுப்பில் படித்த இரட்டை சகோதரிகள்! பெற்றோர் சொன்ன ஒரே வார்த்தை.... 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..!!!
அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு, நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதையடுத்து, குழந்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு குழந்தைகள் நலக் குழுமத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிசிடிவி காட்சிகள் மூலம் தாய், பாட்டி அடையாளம்
இதற்கிடையே, குழந்தையை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கபாலீஸ்வரர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் அங்கு வந்தது தெரியவந்தது.
அந்தப் பெண், தனது தாய் கை காட்டிய இடத்தில் குழந்தையை வைத்துவிட்டு அழுதபடியே திரும்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் அடையாளம் கண்டனர். இருவரையும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த வீட்டிலே நடந்த அதிர்ச்சி! வீட்டின் கதவை திறந்த மஞ்சுநாத் வீட்டில் நடந்த பயங்கரம்...!!!