ஒரே வகுப்பில் படித்த இரட்டை சகோதரிகள்! பெற்றோர் சொன்ன ஒரே வார்த்தை.... 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..!!!
சென்னை திருவேற்காட்டில் 10-ஆம் வகுப்பு படித்த 15 வயது மாணவி வீட்டில் உயிரிழந்தார். மதிப்பெண் தொடர்பான மன உளைச்சல் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில், 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி வீட்டில் உயிரிழந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் அறைக்குள் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி
சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள்கள் பிரியங்கா, பிரியதர்ஷினி. 15 வயதான இருவரும் இரட்டைச் சகோதரிகள். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில்.. சிபிசிஐடி கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப்போன தாய்! இரவு நடந்தது என்ன? கிடுக்குப்பிடி விசாரணயில் திடீர் திருப்பம்..!!
பள்ளி முடிந்து இருவரும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது பிரியங்கா உடை மாற்றிக்கொள்வதாகக் கூறி அறைக்குள் சென்றதாகத் தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் குடும்பத்தினர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதிப்பெண் தொடர்பாக மன உளைச்சலா?
சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரட்டைச் சகோதரிகளில் பிரியதர்ஷினி அதிக மதிப்பெண்களும், பிரியங்கா குறைவான மதிப்பெண்களும் பெற்று வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதனால் பிரியங்காவை நன்றாகப் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் தொடர்ந்து விசாரணை
மதிப்பெண் தொடர்பான அழுத்தம் மட்டுமே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என இதுவரை தெரியவில்லை. குடும்பச் சூழல் உள்ளிட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும்.