×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் குடும்பத்தினர்.! 

Nellai News: நீட் தேர்வில் வெற்றி அடைந்தும், மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில் பெயர் இடம்பெறாததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார். 

Advertisement

நீட் தேர்வு முடிந்து மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து வரும் நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் தனது பெயர் இடம்பெறாத வருத்தத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டார். 

ஐடி ஊழியர் மகள்: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, அன்பு நகர், சித்தார்த்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: அசைவ உணவு கேட்ட மகன்.. அடித்துக்கொன்ற பெற்றோர்.. மனசாட்சியை உலுக்கும் பெற்றோரின் கொடூரம்.!

நீட் முயற்சி: 

தனியார் பள்ளியில் கடந்த 2023 ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்த ஹரிகிருஷ்ணனின் மூத்த மகள் ஸ்ருதிலயா (வயது 21), நீட் பயிற்சி முகாமுக்குச் சென்று நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த ஆண்டில் தேர்வு எழுதிய நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் நடப்பு ஆண்டில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் முழு முயற்சியுடன் படித்து வந்துள்ளார். 


 
வெற்றி: 

நடப்பு ஆண்டில் அவர் நீட் தேர்வில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தேர்வான நபர்களின் பட்டியலும் வெளியானது. அதில், ஸ்ருதிலயாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த சுருதிலயா கவலையில் இருந்து வந்துள்ளார். 

தற்கொலை: 

இதனிடையே, வருத்தத்துடன் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், காலை நேரத்தில் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகளை தேடியபோது, அவரின் வீட்டில் இருந்த ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: நாம பழகினப்போ எடுத்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்.. Ex-ஐ மிரட்டிய இளைஞர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #suicide #neet
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story