×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசைவ உணவு கேட்ட மகன்.. அடித்துக்கொன்ற பெற்றோர்.. மனசாட்சியை உலுக்கும் பெற்றோரின் கொடூரம்.!

சாப்பிட உணவு கேட்ட மகன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

Advertisement

உணவு விவகாரத்தில் மகனை தந்தை அடித்துக்கொலை செய்த நிலையில், குற்றத்தை மறைக்க முயன்றதாக தாயும் கைது செய்யப்பட்டார். 

மதுப்பழக்கம்: 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, வார்ஜே பகுதியில் வசித்து வருபவர் பகவத் கெய்க்வாட் (வயது 64). இவரின் மனைவி பார்வதி (வயது 60). தம்பதிகளின் இளையமகன் மகேஷ் (வயது 30). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையானவர், எப்போதும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: போதையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை.. மகனை கொன்று புதைத்த தாய்.. பகீர் சம்பவம்.! 

தகராறு: 

இதனிடையே, எப்போதும்போல சம்பவத்தன்று மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவர், பெற்றோரிடம் அசைவ வகை உணவை கேட்டு பிடிவாதம் பிடித்துள்ளார். தற்போது வடமாநிலங்களில் ஷ்ரவண மாதம் நடந்துகொண்டு இருப்பதால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் அசைவ உணவுகள் சமைப்பதில்லை. இதனிடையே, மகேஷ் போதையில் பெற்றோரிடம் அசைவ உணவு கேட்டு தகராறு செய்துள்ளார். 

சண்டை: 

இதனால் பெற்றோர் - மகன் இடையே சண்டை ஏற்படவே, ஒருகட்டத்தில் மகேஷின் தந்தை பகவத், தனது மகனை சரமாரியாக அடித்து, உதைத்து இருக்கிறார். இதனால் தலையில் படுகாயமடைந்த மகேஷ் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்து உயிரிழந்தார். 

மரணம்: 

மகன் இறந்தது தெரியாமல், அவர் போதையில் உறங்குகிறார் என பெற்றோர் விளக்கை அணைத்து உறங்கி இருக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் 4 மணியளவில் வீட்டில் விளக்குகளை எரியவிட்டு மகனை எழுப்பியபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. பதற்றத்தில் கொலையை மறைக்க திட்டமிட்டவர்கள், மூத்த மகன் கணேஷிடம் விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கின்றனர். 

உண்மை மறைப்பு: 

அதாவது, மகேஷ் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வரும்போதே தலையில் அடிபட்டு வந்ததாகவும், காலையில் இறந்து கிடப்பதாகவும் கூறி இருக்கின்றனர். தம்பி இரவு 8 மணிக்கு வந்ததை நேரில் பார்த்த சகோதரர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் வந்து விசாரித்தபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, மகனை கொலை செய்ததாக பெற்றோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். a

இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #parents #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story