×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டன் பிரச்சனையில் கலங்கி நின்ற நீட் தேர்வு மாணவி.! உதவிக்கரம் நீட்டிய பெண் காவலர்.!!

பட்டன் பிரச்சனையில் கலங்கி நின்ற நீட் தேர்வு மாணவி.! உதவிக்கரம் நீட்டிய பெண் காவலர்.!!

Advertisement

இந்தியாவில் 22 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் 1.4 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். இன்று காலை 11:30 மணிக்கு மேல் நீட் நுழைவுத் தேர்வு மையங்களில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு மணிக்கு தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. 

மாணவிக்கு அனுமதி மறுப்பு

இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி நீட் தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவி ஒருவர் அதிக எண்ணிக்கையிலான பட்டன் கொண்ட ஆடையை அணிந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!

பெண் காவலரின் செயல்

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து நின்ற மாணவியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் உடனடியாக அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்று புதிய ஆடையை எடுத்துக் கொடுத்தார். 

குவியும் பாராட்டுக்கள்

வேறு துணியுடன் வந்ததால் மாணவி மேற்படி நீட் தேர்வு மையத்துக்குள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார். மேலும் மாணவியின் நிலை அறிந்து தேர்வு எழுத உதவிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NEET exam #neet aspirant #button issue #women police officer #நீட் தேர்வு மாணவி #பெண் காவலர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story