×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களே வெளியே வராதீங்க... 420 கி.மீ தொலைவில் மையம் கொண்ட ‘முரசு’ புயல்! ஆரஞ்சு அலர்ட்... தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!!!

வங்கக்கடலில் உருவான முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மற்றும் திருவள்ளூரில் திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'முரசு' புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் சென்னையிலிருந்து சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புயல் சின்னம் உருவானது..! தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட்... இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!!!

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கவிதா திங்கள்கிழமை விடுமுறை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அதே நாளில் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை; தயார் நிலையில் இருக்க உத்தரவு

திங்கள்கிழமை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிகக் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழையால் ஏதேனும் பாதிப்பு அல்லது அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாகப் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: 4 வருஷம் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை.. எப்படி சேமிக்கணுன்னு தெரியாம போச்சு! பீரோவைத் திறந்ததும் எலக்ட்ரீசன்கு காத்திருந்த பேரதிர்ச்சி! CM விஜய்யிடம் உதவி கோரிக்கை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முரசு புயல் #சென்னை பள்ளி விடுமுறை #திருவள்ளூர் #orange alert #Tamil Nadu Weather
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story