மெட்ரோ ரயிலில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை! கவனிக்காத பெற்றோர்! வைரலாகும் வீடியோ...
மெட்ரோ ரயில்லில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை! கவனிக்காத பெற்றோர்! வைரலாகும் வீடியோ...
மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில், ஒரு 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக மேடையில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் மெட்ரோ ஊழியர்கள் விரைந்து செயல்பட உயிரிழப்பாக மாறாமல் தவிர்க்கப்பட்டது.
மெட்ரோ ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது,கதவுகள் மூடப்படுவதற்கு முன், அந்த குழந்தை ரயிலில் இருந்து இறங்கி மேடையில் நின்றுவிட்டது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, தங்கள் பிள்ளை வெளியேறியதை கவனிக்காதது ஒரு நொடிக்குள் பெரிய விபத்தாக மாறும் நிலை ஏற்பட்டது.
ஊழியர்கள் விரைந்து மீட்ட வீரம்
மெட்ரோ ஊழியர்கள் அந்தக் குழந்தையை தனியாக இருப்பதை கவனித்து, உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பினர். ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார், பின்னர் ஊழியர்கள் விரைந்து சென்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டதும், பதற்றமடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளையை மீண்டும் அழைத்துச் சென்றனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகள் வைரல்
இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி, மெட்ரோவில் உள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, மக்கள் மெட்ரோ ஊழியர்களின் தைரியம் மற்றும் விழிப்புணர்வை பாராட்டி வருகின்றனர்.
MMMOCL அதிகாரப்பூர்வ வெளியீடு
மகா மும்பை மெட்ரோ ஒப்பரேட்டிங் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (MMMOCL) இந்த வீடியோவை தங்களின் @MMMOCL_Official சமூக வலைதள கணக்கில் பகிர்ந்துள்ளது. “இது உண்மையில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய செயல்,” என சமூக ஊடக பயனர்கள் பாராட்டியுள்ளனர்.
பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகத்தின் எச்சரிக்கை
மும்பை மெட்ரோ நிர்வாகம், சிறுவர்களை கவனமாக பாதுகாப்பது முக்கியம் எனத் தெரிவித்துள்ளது. அலட்சியம் இவ்வாறான அவசர சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: Video : காற்றில் பறந்த ராட்சத பலூன்! மெது மெதுவாக தீப்பிடித்து எறியும் காட்சி! 8 பேர் உயிரிழப்பு! பதறவைக்கும் பகீர் வீடியோ!