Video : காற்றில் பறந்த ராட்சத பலூன்! மெது மெதுவாக தீப்பிடித்து எறியும் காட்சி! 8 பேர் உயிரிழப்பு! பதறவைக்கும் பகீர் வீடியோ!
பார்க்கவே பதறுது! காற்றில் பறந்த ராட்சத பலூன்! மெது மெதுவாக தீப்பிடித்து எறியும் காட்சி! 8 பேர் உயிரிழப்பு.. பகீர் வீடியோ!
பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் நடந்த ஒரு வெப்பக் காற்று பலூன் விபத்து, சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை காலையில் பயணிகளை ஏற்றி புறப்பட்ட பலூன், வானத்தில் தீப்பற்றி கீழே விழுந்ததால் 8 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 பயணிகளுடன் புறப்பட்ட பலூன் தீப்பற்றி விழுந்தது
இந்த துயரமான சம்பவம் பிரியா கிராண்டே பகுதியில் இடம்பெற்றது. வெப்பக் காற்று பலூன் வானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலூன் மெதுவாக தரையில் விழுந்த நிலையில், அந்த காட்சியை பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மீட்புப்பணியில் தீவிர ஈடுபாடு
மாநில இராணுவ தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள், தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்களது முயற்சியால் 13 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், விமானி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! 3600°C வரை வெப்பத்தை தாங்கும் செராமிக்!
மாநில ஆளுநரின் அனுதாபம்
இந்த விபத்து குறித்து மாநில ஆளுநர் ஜோர்ஜினோ மெலோ, “இது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்தார்.
விசாரணையில் போலீசும் விமான பாதுகாப்பு துறையும் இணைந்து செயல்படுகிறது
இந்த வெப்பக் காற்று பலூன் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து, பிரேசில் போலீசும், விமான பாதுகாப்புத் துறையும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த பலூன் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் கவனமாக ஆய்வு செய்கின்றனர்.
இதையும் படிங்க: மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா? இப்படி மட்டும் செய்யவே கூடாதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...