மகிழ்ச்சி செய்தி! தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு.! பொதுமக்கள் முன்கூட்டியே திட்டம்மிட்டுக்கோங்க...!!!
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26 அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் மூடப்பட்டு 3 நாள் நீண்ட வார இறுதி கிடைக்கிறது.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 26, 2026 வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் அன்றைய தினம் செயல்படாது.
இதன் காரணமாக, வங்கி சேவைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகளை பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை.....? வெளியான முக்கிய தகவல்!!!
மூடப்படும் முக்கிய நிறுவனங்கள்
மொஹரம் விடுமுறையையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக, வங்கிப் பரிவர்த்தனைகள், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் அரசு சேவைகள் தொடர்பான பணிகள் தாமதமடைய வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
வெள்ளிக்கிழமை மொஹரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வருவதால், பலருக்கு தொடர்ந்து 3 நாட்கள் நீண்ட வார இறுதி கிடைக்கிறது.
இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத் திட்டங்களுக்கு நல்ல வாய்ப்பு
நீண்ட வார இறுதியை பயன்படுத்தி பலர் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், குடும்பத்தினருடன் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர். இதனால் முக்கிய சுற்றுலா மையங்களில் முன்பதிவுகள் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள் போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளுக்கான முன்பதிவுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுவது சிறந்தது. இந்த Long Weekend பலருக்கும் ஓய்வையும் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இதையும் படிங்க: ஒரே ஜாலி தான்.... பள்ளி தொடக்க மாதத்திலே மாணவர்களுக்கு மேலும் 9 நாட்கள் விடுமுறை..!!!