×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Microplastic in Water Bottles: பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக்.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Water Bottle Microplastic: வாட்டர் பாட்டில் தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் வாட்டர் பாட்டில் நீரில் இருப்பதால், அதுதொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்:

நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கின் வாதம் இன்று (ஜன.06) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கனமழை எதிரொலி.!

ஆய்வில் உறுதி:

அந்த விளக்கத்தில், "உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்வது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. லக்னோ, பிலானி பகுதியில் இருக்கும் ஆய்வு மையங்களில் குடிநீர் பாட்டிலில் பிளாஸ்டிக் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. உத்திரப்பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் நடந்த ஆய்வில் பாட்டில் கேன் தண்ணீரில் பிளாஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன" என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு:

இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், "மைக்ரோபிளாஸ்டிக்கால் மனிதர்கள், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படும். சிகிரெட் பாக்கெட்டுகளில் இருக்கும் எச்சரிக்கை வசனங்களைப்போல, இதுதொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். அதனை குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். ஆய்வு தொடக்க நிலையில் இருப்பதால், அதனை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health #chennai high court #Microplastic #Water Bottles #மைக்ரோ பிளாஸ்டிக் #வாட்டர் கேன் #சென்னை நீதிமன்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story