#Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கனமழை எதிரொலி.!
School College Holiday: டிட்வா புயல் எதிரொலி காரணமாக, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு (Breaking News Tamil) விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட 3 மாவட்டங்களில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக வலுப்பெற்று இலங்கையை கடந்து இருக்கிறது. இந்த புயல் இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், இலங்கையின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த புயல் நகர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியபடி ஆந்திரா நோக்கி பயணித்து வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை உட்பட வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் தரைக்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலூர்: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை அலர்ட்டால் முதல் மாவட்டமாக அறிவிப்பு.!
பள்ளி-கல்லூரி விடுமுறை:
இந்நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி & காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், சிறப்பு வகுப்புகள் போன்றவை நடக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்ட நிர்வாகங்களை தொடர்பு கொண்டு நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார். பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.