×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த சந்தோஷம் நொடிப்பொழுது கூட நிலைக்களையே....! அக்காவைக் பார்த்ததும் ஓடிவந்த 3 வயது பாப்பா! அடுத்த சில வினாடிகளில் நிகழ்ந்த கோர விபத்து... கதறி துடிக்கும் பெற்றோர்...!!!

மயிலாடுதுறை அருகே அக்காவை அழைத்துச் செல்ல வந்த பள்ளி வேனின் பின்சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தார். ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

Advertisement

மயிலாடுதுறை அருகே பள்ளி வேனில் இருந்து இறங்கிய அக்காவைச் சந்திக்க ஓடிவந்த 3 வயது சிறுமி, எதிர்பாராதவிதமாக வேனின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சித்தாம்பூர் கிராமத்தில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அக்காவை பார்க்க ஓடிவந்த சிறுமி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மூத்த மகள் மகிழினி, தேரழுந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிய மகளை அழைத்துச் செல்ல அவரது தாய் வீட்டின் அருகே சென்றிருந்தார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! ஓடும் பேருந்தில் இருந்து பலவந்தமாக பழங்குடியின மாணவிகள் தள்ளிவிட்ட நடத்துநர்! 8 பேருக்கு தலை, கை, கால்... புதுக்கோட்டையில் பரபரப்பு...!!!

அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இளைய மகள் இதழினி, அக்கா வந்ததைப் பார்த்ததும் உற்சாகத்தில் வெளியே ஓடிவந்துள்ளார். தாயின் கவனத்தைத் தாண்டி வந்த சிறுமி, வேனின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது.

ரிவர்ஸ் எடுத்த வேனில் சிக்கிய குழந்தை

சிறுமி பின்புறம் நிற்பதை கவனிக்காமல், வேன் ஓட்டுநர் தமிழ்வாணன் வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இதழினியின் தலைப்பகுதியில் வேனின் பின்சக்கரம் ஏறியது. பலத்த காயமடைந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மீட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இதழினி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஓட்டுநர் கைது

சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். மகளை இழந்த பெற்றோரின் கதறல் அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து பாலையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேனை பறிமுதல் செய்தனர். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாக கூறப்படும் ஓட்டுநர் தமிழ்வாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இறங்கும் இடங்களில் ஓட்டுநர் கவனம் மிகவும் அவசியம் என்றும், பள்ளி வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: BREAKING: குஷியோ குஷி! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...!!,

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மயிலாடுதுறை #பள்ளி வேன் #School van accident #சிறுமி உயிரிழப்பு #Palaioor Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story