×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என்னோட நீ வாழவில்லை என்றால் சாவு" - திருமணமான அத்தை மகள் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!

Chennai News: இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்த பயங்கரம் சென்னையில் நடந்துள்ளது.

Advertisement

குடும்பத்தில் நடந்த தகராறு இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தம்பதிகள்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வந்தவர் ரேஷ்மா (வயது 29). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அசோக் (வயது 29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 9 வயது மகனும், யாத்திகா என்ற 8 வயது மகளும் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

குடும்ப சண்டை:

இதனிடையே, கணவன்-மனைவி பிரச்சனை காரணமாக ரேஷ்மா 2 மாதங்களுக்கு முன்னதாக மகள் யாத்திகாவுடன் சென்னை அனகாபுத்தூருக்கு வந்துள்ளார். இங்கு சத்யா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். ரேஷ்மாவின் அத்தை மகன் விஜி அவ்வப்போது பெண்ணின் வீட்டுக்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழ் என கட்டாயப்படுத்தி இருக்கிறார். 

ஒத்துழைக்காததால் சோகம்:

இந்த விஷயத்துக்கு ரேஷ்மா மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனிடையே, நேற்று இரவு 10 மணியளவில் ரேஷ்மாவின் வீட்டுக்கு வந்த விஜி மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணி தோழிகள் மரியா, ஜெனிபர் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து தங்க வைத்துள்ளார். பின் அனைவரும் உறங்கிய நிலையில், அதிகாலை சுமார் 3 மணியளவில் விஜி, ரேஷ்மாவின் தோழிகள் முகத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்து ரேஷ்மாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பரிதாப மரணம்:

இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரேஷ்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் நேரில் வந்த அதிகாரிகள் ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #chennai #Murder #திருமணம் #அத்தை மகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story