×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#தர்மபுரி : பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணை கொல்ல முயற்சி.! தர்ம அடி கொடுத்த போது மக்கள்.!

#தர்மபுரி : பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணை கொல்ல முயற்சி.! தர்ம அடி கொடுத்த போது மக்கள்.!

Advertisement

தர்மபுரி பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயதான சின்னசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின்படி, திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆத்திரத்தில், அந்த இளம்பெண்ணை தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சின்னசாமி தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்து நிறுத்தி, அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளம்பெண், தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "சிரிப்பா சிரிக்குது நிலைமை... " அரை நிர்வாண கோலத்தில் ஆபாச பேச்சு.!! போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்த காவல்துறை.!!

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. காதல் அல்லது திருமண மறுப்பு போன்ற எந்த காரணமும் ஒரு பெண்ணின் உயிரை பறிக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ யாருக்கும் உரிமை வழங்காது என்பதே சட்டத்தின் அடிப்படை.

மேலும், இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுவதும் சமூகத்தில் தவறான மனநிலையை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளுடன், வன்முறையை ஊக்குவிக்கும் செயல்களையும் அரசு கண்காணித்து தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் கிடந்த ஆண், பெண் சடலங்கள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி! கொடூர குடும்பத்தின் அதிர வைக்கும் வாக்குமூலம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #Crime #attempttomurder #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story