நைட்டி அணிந்து வரும் பெண்கள், கல்லூரி மாணவிகள் டார்கெட்.. செல்போனில் அதிர்ச்சி.. சிவகங்கையில் திடுக்.!
பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவிகள், பெண்கள் ஆபாச வீடியோ எடுத்தவர் சிக்கிக்கொண்டார்.
19 வயது இளம்பெண்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, பள்ளத்தூரில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் கடையில் பொருட்கள் வாங்க நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அருகில் இருந்த நபர் பெண்ணை வீடியோ எடுப்பதை கண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கொடுமை.. பெண்கள் வெளியே வரவேகூடாதா? 2 முதியவர்கள் சேர்ந்து அதிர்ச்சி செயல்.!
விசாரணை:
பின் இதுகுறித்து பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கானாடுகாத்தான் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்த 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதிர்ச்சி காட்சிகள்:
இவர் உள்ளூரில் பேருந்து நிலையம், மாணவிகள் நிற்கும் இடத்தில் மாணவிகள், நைட்டி அணிந்து வரும் பெண்களை குறிவைத்து ஆபாச வகையில் வீடியோ எடுத்து ரசித்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று 19 வயது பெண்ணிடம் சிக்கி, அவர் கேள்வி எழுப்பியபோது ஆபாசமாக பேசி இருக்கிறார். மேலும், விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன், காவல்துறையில் கூறினால் கொலை செய்வேன் எனவும் மிரட்டி இருக்கிறார்.
பல விடியோக்கள்:
அவரின் செல்போனில் மொத்தமாக 100 க்கும் மேற்பட்ட விடியோக்கள் இருந்ததால், அதிகாரிகள் அவரின் செல்போனை பறிமுதல் செய்து கைது செய்தனர். இவரின் மீது பாலியல் தொல்லை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: +2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!