×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டூவீலரில் பின்தொடர்ந்து தினமும் இதே வேலை.. ஊரே கூடி செய்த வேலை.. சிக்கிய காமுகன்.! 

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.  

Advertisement

சிறுமிகள், அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர் சிக்கினார். 

ஆசிரியை: 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம், சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 47 வயது பெண் ஆசியர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து, பின் அங்கிருந்து பள்ளிக்குச் செல்வது வழக்கம். 

இதையும் படிங்க: பள்ளியில் வைத்து ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. 7 வயது சிறுமி கூறிய தகவல்.. போர்க்கொடி தூக்கிய உறவினர்கள்.! 

பாலியல் தொல்லை: 

இதனிடையே, அங்குள்ள சிவஞானபுரம் பகுதியை சேர்ந்த கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 44), பெண் ஆசிரியை பள்ளிக்குச் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரை வழிமறித்து ஆபாசமாக பேசுவது, அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்து அச்சுறுத்துவது என பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. 

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.. 

இதனிடையே, இன்றும் வழக்கம்போல ஆசிரியைக்கு தொல்லை கொடுத்தவரை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரித்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும், இவர் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து, அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி பல பெண்களுக்கும் இதுபோல தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: 'வேலை கொடுக்குறேன் வாங்க' - பெண் செய்தியாளருக்கே இப்படியா? மனைவியுடன் சேர்ந்து தொழிலதிபர் ஷாக் செயல்.. சென்னையில் திடுக்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #Thoothukudi #School teacher
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story