×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த லிஸ்ட்டுக்குள் இருந்தால் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை ரூ.2500...! யாருக்கெல்லாம் கிடையாது? முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய தகுதி விதிமுறைகள், வயது வரம்பு மற்றும் ஆன்லைன் சரிபார்ப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் வகையில் திட்டத்தை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வயது வரம்பில் மாற்றம்

அரசு வட்டாரத் தகவல்களின்படி, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும். ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய தகுதி விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்திற்கு பதிலாக முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் நடைமுறை மாற்றம் கொண்டுவரப்படலாம் என்றும், 60 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்களுக்கு மட்டும் திட்டத்தின் பலன் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

புதிய தகுதி விதிமுறைகள்

திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்க அரசு புதிய நிபந்தனைகளை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இனி விண்ணப்பிக்கும் புதிய பயனாளிகள் அனைவரும் இந்த விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், உண்மையான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் தரவு சரிபார்ப்பு

பயனாளிகளைத் துல்லியமாக அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் தானியங்கி முறையில் தேர்வு செய்யப்படும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த மாற்றங்கள் குறித்து விஜய் அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

 

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகையில் தகுதியற்றவர்களின் பட்டியல் நீக்கம்..... இனி ரூ.2500 யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Magalir urimai thogai #Women Scheme #விஜய் அரசு #tamil nadu #₹2500 திட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story