×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எமனாக விழுந்த மின்சார கம்பி.. கல்லூரி மாணவரை காப்பாற்ற முயன்ற பெரியப்பாவும் பரிதாப பலி.!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மதுரையில் உயிரிழந்தனர்.

Advertisement

உயர் மின்னழுத்த கம்பி கல்லூரி மாணவருக்கும், அவரை காப்பாற்ற முயன்ற பெரியப்பாவுக்கும் எமனான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மாட்டுத்தீவனம் அறுக்கச் சென்றார்:

Madurai News Today: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, டி. நாராயணபுரம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (வயது 20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பி.இ. 2ம் ஆண்டு பயின்று வருகிறார். சம்பவத்தன்று தனது வயலுக்கு மாட்டுத்தீவனம் அறுக்கச் சென்றுள்ளார். அப்போது, தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது. 

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

காப்பாற்ற முயற்சி:

கிருஷ்ணன் மீது மின்னழுத்த கம்பி விழுந்து கிருஷ்ணன் துடிதுடித்து பரிதவித்த நிலையில், கிருஷ்ணனை மீட்க அவரின் பெரியப்பா ஆதி நாராயணன் முயற்சித்துள்ளார். இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் சகோதரர் சின்னத்தம்பியும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 

பரிதாப மரணம்:

இந்த சமயத்தில், ஆதி நாராயணன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சின்னத்தம்பி படுகாயமடைந்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறை & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் கண்ணீர்:

இதன்பேரில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும், சின்னத்தம்பி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கட்டிடம் இடிக்கும் பணியில் சோகம்.. பரிதாபமாக பறிபோன இளம் உயிர்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #madurai #Crime news #accident #விபத்து #மதுரை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story