×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டிடம் இடிக்கும் பணியில் சோகம்.. பரிதாபமாக பறிபோன இளம் உயிர்கள்.!

Tiruvannamalai Accident Today: வந்தவாசியில் கட்டிடம் இடிக்கும் பணியில் சிறார்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

வீட்டின் இடிபாடு பணிகள் நடக்கும்போது 2 சிறார்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இதில் சிறார்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீடு பராமரிப்பு பணிகள்:

Tiruvannamalai News Today: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, இளவன்காடு பகுதியில் வசித்து வருபவர் முனியன். இவர் அரசு தொகுப்புவீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே, வீடு கட்டிக்கொடுத்த நீண்ட ஆண்டுகள் ஆனதால், வீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளன. வீட்டின் ஒரு பகுதியை இடித்து அகற்றும் பணிகளும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.! 

வீடு இடிந்து சோகம்:

முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ், முகேஷ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது, இருவரும் எதிர்பாராத விதமாக இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கின்றனர். மேலும், மற்றொரு 10ம் வகுப்பு மாணவரும் படுகாயம் அடைந்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்பு & மீட்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் பரிதாப பலி:

தகவலை அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் சிறுவர்களை மீட்டபோது, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், மற்றொரு மாணவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த அபினேஷ், முகேஷின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruvannamalai #accident #tamilnadu #திருவண்ணாமலை #விபத்து #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story