×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.! 

Madurai Accident: விமானத்தை பார்க்கும் ஆசையில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Advertisement

இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தோழர்கள்: 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரளச்சி பகுதியில் வசித்து வருபவர் பாண்டித்துரை (வயது 22). அங்குள்ள திருச்சுழி, உடைய சேவைக்காரன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முனீஸ்வரன் (வயது 24). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். 

இதையும் படிங்க: #JUSTIN: நொடியில் நடந்த கோர விபத்து.. இளம் தம்பதி, பச்சிளம் பிஞ்சு என 4 பேர் பலி.. மதுரையில் சோகம்.! 

மதுரையில் வேலை: 

கட்டிட தொழிலாளர்களான இருவரும் கடந்த சில நாட்களாகவே மதுரையில் உள்ள திருப்பாலை பகுதியில் தங்கியிருந்தபடி வேலை பார்த்து வந்துள்ளனர். பின் கோயில் திருவிழாவில் பங்கேற்க பாண்டித்துரை, முனீஸ்வரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டு இருக்கின்றனர். 

விபரீத பயணம்: 

மதுரை விமான நிலையம், சின்ன உடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, விமான நிலையத்தில் இருக்கும் விமானம் ஓடுதளத்துக்கு வருகிறதா? என எட்டிப்பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

விபத்து: 

அச்சமயம், திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. அப்போது, சாலைத்தடுப்பில் மோதி இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் சாலையிலேயே சிறிது நேரத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். 

விசாரணை: 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இருவரின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: படிக்கட்டு பயணத்தால் விபரீதம்.. மாணவர்களின் பெற்றோர்களே உஷார்.. பேருந்தில் இருந்து கீழே விழுந்து சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #accident #death #Madurai Airport View
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story